Posts

Showing posts from July, 2018

கண்ணா வருவாயா!

Image
உனை தேடி பார்க்கிறேன் உறவாட பார்க்கிறேன் மன்றாடி கேட்கிறேன் மனதோடு பூபாலம் கேட்கிறேன் நாடி வருவாய் என்றே எதிர்பார்கிறேன் மாயங்கள் செய்கிறாய் மனதை காயங்கள் செய்கிறாய் கண்களில் கலந்து விடு காலங்கள் கடந்தாலும் உன்னோடு உறவாடுவேன் கண்ணா !

நேசம்

அவளின் அன்பிலே வஞ்சனை இல்லை கொஞ்சம் வாஞ்சை மட்டும் என் மீது ஏனில்லை. தேடி வருவேன் என்று காத்திரு தினம் தேடியே தொலைகிறேன் நேசமெனும் நெஞ்சத்தில் புதிதாய் பிறக்கிறேன் நீ நேசம் வைக்கவே சில நேரம் நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவே பல நேரம் என் தாகம் தீர்க்கவே புதிதாய் பிறக்கிறேன்

வாசமல்லிகை

தொடுக்க முடியா மலர் இது நீ தொட முடியா மலர் இது வாடிய மலரிடம் வாசனை தேடுகிறாய் நீ தொடுக்க நான் மல்லிகை அல்ல மடிந்து விட்ட அலர் நாரெடுத்து வந்து விட்டாய் நான் நாண்டு நாட்கள் ஆனதை மறந்து வண்ணமும் போனது வசந்தமும் வழி மாறிப்போனது. வாசமல்லிகை தான் நான் வசந்தத்தை இழந்த  வாசமல்லிகைதான்!

சிறையை விட்டு சிறகை விரித்து வா

Image
காயம்படும் போது மட்டும் கண்ணீர் வரச் செய்கிறாய் காதலில் மட்டும் கருணை தர மறுக்கிறாய் சொல்ல வார்த்தைகளை தேடி வைத்தேன் வார்த்தையிலே எனை தொலைத்தேன் கதாநாயகன் நானல்ல உன் கனவு நாயகன் நானல்லவா. கதை பேசிட வரவா கவிதையிலே வடித்த வரிகளை மன இறகில் செதுக்கிடவா மன சிறகை விரித்து எனை அடைந்திட வா !!!

என் காதலை சொல்லிடவா

நீ இல்லாத தேசத்தில் பூ வாசம் செய்யாது. நீ மனதில் நுழைந்த நேரம் என் மேனி எங்கும் புது வாசம் காணுது. தொட்டுத் துரத்தி வருகிறாய் தொட நினைத்தபோது நிழலாய் சென்று மறைகிறாய். வாய்மொழி கூட மறந்தேனே பேசா நேரமெல்லாம் மூச்சு கூட பந்தய குதிரை ஆனதே. பந்தலில் மனப்பந்தலில் மகிழ்ந்திட வாராயோ! விரல் கூட நனைந்துபோனது என் நாணம் மட்டும் உனை கண்டு கலைந்து போகாதோ! சொல்லிட வா என் காதலை சொல்லிட வா!

முத்தம்

சத்தமின்றி சலனம் செய்கிறாய் மிச்சமின்றி சரசம் செய்கிறாய்! கன்னம் தொட்டு களவு செய்கிறாய் கண நேரத்தில் காதலை கவிதையில் சொல்லி செல்கிறாய்! இதழில் கவிதை எழுதிவிட்டாய் இருளில் கதை பேசி முடித்துவிட்டாய்! முத்த சத்தங்கள் இட்ட இடங்கள் மேளங்கள் கொட்டி போனதே! அந்தி வரும் முன்னே மனம் தந்தனத்தோம் பாடுதே! கொலுசின் ஓசையும் வளையல் ஓசையும் எனை எள்ளி நகையுதே! மெட்டி ஓசை மட்டும் உன் வரவுக்காக நித்தம் வாடுதே!

மழை

மண் வாசனை சொல்லியது நீ வரும் நேரம் இதுவென! மேகக் கூட்டம் சொல்லியது நீ மண்ணில் வந்து விழும் நேரம் இதுவென! இருமாப்பு கொண்டு இருந்த போது இடியும் இடித்து சொல்லியது! தெளிவற்று கிடந்த போது ஒளியிட்டு மின்னல் கீற்றாய் என்னுள் பரவியது! மழையே என் மாமழையே! வந்து என்னை அணைக்க வா! உன்னுள் என்னை கலக்க வா! விதி என்றென்னி கிடக்கவா? விதையாய் மண்ணில் திளைக்கவா? மழையாய் பொழிந்து என்னை மீட்க வா விளைந்து விளைவை வரும் விளைவை சந்திப்போம்! வா மழையே என் மாமழையே வா!!!!

தாரகை

இருளில் வந்த நட்சத்திரம் என் வாழ்வில் நான் கண்ட விசித்திரம்! கற்பனை வானில் தாரகை என் கண்ணில் கண்ட ஓவியம்! மின்னியே போகிறாய் எனை மின்மினியாய் ஆக்கி செல்கிறாய்! உனை எண்ணிச் சொல்லவா என் எண்ணங்களை சொல்லிச் செல்லவா! கண்ணில் வந்து செல்கிறாய் கனாவாய் எனை களவாடிச் செல்கிறாய்! விடியலில் செல்லும்முன் விடிவெள்ளியாய் வாய் திறந்து சொல்.

பூவாசம்

மது ரசத்தை மலரிடம் பறித்து  சென்ற வண்டு நன்றி சொல்ல வந்ததோ என்று இரைச்சலிட்டு உள்ளே சென்றாய் எனை இம்சை செய்து இளைப்பாறினாய். குடித்த ரசமெல்லாம் இனிப்பானது குடித்தனம் செய்ய மறுப்பதேனோ! குலவியாய் வந்து குளவிச் சென்றாய் நானும் குழந்தையாய் ரசித்து நின்றேன். என் வாசமெல்லாம் உன் வசமானதே மொட்டு மலர்ந்து மெட்டு பாடுதே மலர்ந்தே நிற்கிறேன் தளர்வதற்குள் தாகம் தீர்ப்பாயோ!

உள்ளம் கொள்ளை போகுதே

உன் நெஞ்சமெனும் கதவு திறந்திட வஞ்சகம் செய்தேனடி நீ அறியா தருணம் உன் அழகை ரசித்தேனடி நீ பேசும் தருணம் எனை நான் மறந்தேனடி உன் பார்வையில் நான் விழுந்தேனடி இப்போது நான் பரிதவித்தேனடி என் உள்ளம் கொள்ளை போனதேனடி ஊமையாய் சிரித்து எனை கொள்வதேனடி!

நினைவலைகள்

திருவிழா கூட்டத்திலே எனை தேடி திரிந்தாயடா சில நேரம் தெம்மாங்கு பாடி திரிந்தாயடா கிள்ளி செல்லவும் காதலைச் சொல்லி செல்லவும் காவல் காத்து நின்றாயடா கொஞ்சி பேசிட கெஞ்சி நிற்கிறாய் அஞ்சி நானே மிஞ்சி போகிறேன். உன் நினைவுகளில் பஞ்சு மெத்தை கூட பாறை போல பாரமானதே நினைவுகள் அலையானதே கரையில் முத்தமிட்டு நம் காதல் பேசுதே!

அன்பு

மொழி இல்லா தேசத்தில் வழி சொல்ல வந்தவளே! கரம் பிடிக்க காத்திருந்தும் சில வரம்புகள் வைத்தே வாழும் தேவதையே! மடிமீது சாயச் சொல்லி முள் மனதை முல்லை  பூவாக்கிய பூவையே! நீ கிடைத்தால் நிம்மதி! நீ மறுத்தால் நிற்பேன் நிற்கதி.😢